ருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பட்டப்பகலில் வங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55) விவசாயி. இவர் நேற்று காலை தனது ஸ்கூட்டரில் அவினாசி நகர பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். பின்னர் அந்த வங்கியில் தனது கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.
அந்த பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு வங்கி முன்பு நிறுத்தி வைத்திருந்த தனது ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் உள்ள பெட்டியில் வைத்தார். பிறகு அருகிலுள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்ற அவர் அங்கு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார். அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், சண்முகத்தின் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பினர். இவர்களில் 2 பேர்
சிறிது நேரம் கழித்து கடையில் இருந்து வெளியே வந்த சண்முகம் தனது ஸ்கூட்டரில் ஜெராக்ஸ் எடுத்த பேப்பர் நகலை வைக்க முயன்ற போது ஸ்கூட்டர் பெட்டி திறந்து கிடந்ததையும் அதில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கம் தேடியும், அப்பகுதியில் நின்றவர்களிடம் விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீசில் புகார் சண்முகம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து மர்ம நபர்கள் வந்த இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை திருப்பூர், பல்லடம், கோவை உள்ளிட்ட போலீசாருக்கு அனுப்பி விசாரணை நடத்தி தேடிவருகிறார்கள். ஸ்கூட்டரில் இருந்து பணம் திருடப்பட்ட காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சி தற்பாது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அவினாசி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.