டெல்லி: ஹரியானாவின் ரோங்டங் நகர் சாலையின் ஒருவழிப்பாதையில் இரவுநேரத்தில் பெண் ஒருவர் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினார். அந்த பெண் போலீசாரை டைமிங்கில் கலாய்த்தார். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் இல்லையென்றால் ‘எமராஜா’வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவாய் என போலீஸ்காரர் எச்சரித்தார். அப்போது அந்த பெண், எமராஜா யார்? உங்கள் அப்பாவா? என மிமிக்ரி குரலில் கேட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
போக்குவரத்து போலீசார் விதிகளை மீறாத பட்சத்தில் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.. டிராபிக் விதிகளை மீறினால், போலீஸ் கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். லைசென்ஸ் இல்லாமல் ஓட்டினால் 1000 ரூபாயும், இன்சூரன்ஸ் இல்லை என்றால் 2500 வரையிலும், 3 பேர் சென்றால் 1000 ரூபாயும், அபராதம் விதிக்கப்படுகிறது.
ஹரியானாவின் ரோங்டங் நகர் சாலையின் ஒருவழிப்பாதையில் இரவுநேரத்தில் பெண் ஒருவர் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அங்கே பணியில் இருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர், சாலை விதிகளை பின்பற்றாமல் வந்த இளம்பெண்ணின் வாகனத்தை தடுத்தி நிறுத்தினார். பின்னர் அவருடைய பெயரை கேட்டு அபராதம் விதிக்க முயன்றார்.
அப்போது அந்த பெண், பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான ‘சின்சான்’ என தன்னை அறிமுகம் செய்துகொண்டு அந்த பாத்திரத்தைபோல ‘மிமிக்ரி’ குரலில் பேசியும் பாவனையும் காட்டினார். அதற்கு அந்த போலீஸ்காரா், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் இல்லையென்றால் ‘எமராஜா’வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவாய் என எச்சரிக்கிறார்.
அதற்கு அவர், எமராஜா யார்? உங்கள் அப்பாவா? என மிமிக்ரி குரலில் அந்த பெண் கேட்கிறார். ‘மிமிக்ரி’ செய்து போலீசை கலாய்ந்த இளம்பெண்ணின் இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி 1 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.