தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..! மோக்கா புயல் எதிரொலியா?

Published:

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த புயல் வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் அந்த மாவட்டங்கள் ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் என்றும் அறிவித்துள்ளது.

rain 1

இருப்பினும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அதிக வெப்பத்திற்கு தான் வாய்ப்பு என்று கூறப்படுகிறது . சென்னையில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் தென் மாவட்டங்களில் உள்ள அளவுக்கு சென்னையில் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னை மக்கள் வெப்பத்தில் அவதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோக்கா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் மற்றும் ஆந்திரா பகுதிகளில் மழை பெய்தாலும் சென்னையில் மட்டும் மழை பெய்யவில்லை என்பது சென்னை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...