சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் அபாரம்.. பரிதாபமாக தோல்வி அடைந்தது டெல்லி..!

Published:

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று நடைபெற்ற 55வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

ஷிவம் துபே 25 ரன்கள், ருத்ராஜ் கெய்க்வாட் 24 ரன்கள், அம்பத்தி ராயுடு 23 ரன்கள் மற்றும் தோனி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து 168 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடிய நிலையில் முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் அவுட் ஆனார். அதனை அடுத்து மூன்றாவது ஓவரில் சால்ட், நான்காவது ஓவரில் மார்ஷ் மற்றும் 13வது ஓவரில் மனிஷ் பாண்டே ஆகியோர் அவுட் ஆனவுடன் டெல்லியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது

இதனை அடுத்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை அணி இன்றைய போட்டியில் அபார வெற்றி பெற்று 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. டெல்லி அணி இன்றைய தோல்வி காரணமாக மீண்டும் பத்தாவது இடத்திலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...