பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 690 பேர் கணிதத்தில் சதம், 2 பேர் மட்டுமே தமிழில் சதம்.. ஒரு பார்வை..!

Published:

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் வருகை தாமதம் காரணமாக 10.15 மணிக்கு வெளியானது.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் பொது தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கிட்டத்தட்ட தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 690 பேர் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தமிழில் இரண்டு பேர்கள் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 6573 மாணவர்கள் கணக்குப்பதிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் டூ பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. அம்மாவட்டத்தில் 97.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தில் திருப்பூர் மற்றும் மூன்றாவது இடத்தில் பெரம்பலூர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையை பொறுத்தவரை மாணவ, மாணவிகள் மிக அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் 91.40% மாணவர்களும் 96.64 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 94.03 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இது குறித்து மேலும் விவரங்கள் இதோ:

தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451 (94.03%)

மாணவியர்  : 96.38%

மாணவர்கள்  : 91.45%

சிறைவாசிகள்  : 79 பேர்

மேலும் உங்களுக்காக...