பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு எப்போது? தேதி அறிவிப்பு..!

By Bala Siva

Published:

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் பார்த்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களில் 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெறும் ஆறு சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடையாத நிலையில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பிளஸ் டூ பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களை பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் சென்று மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பதும் மாணவர்கள் தாங்கள் எந்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையோ அந்த பாடத்தை துணை தேர்வாக எழுதி இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் வெறும் 5.97 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை என்பதால் அவர்கள் அனைவரும் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் டூ பொதுத்தேர்வில் 47 ஆயிரத்து 934 பேர் தேர்ச்சி பெறாத நிலையில் அவர்கள் அனைவரும் துணை தேர்வில் கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் உங்களுக்காக...