கடும் வெயிலிலும் மக்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு.. 5 நாட்களுக்கு மழை பெய்யுமாம்..!

Published:

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளை மேல் வளிமண்டல கீழ் அடுக்கு காற்று மாறுபாடு காரணமாக தமிழகம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏப்ரல் 21-ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலும் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் 19, 20 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இயல்பான வெப்பத்திலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை தான் நிலை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு தமிழகம் புதுவை ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பெய்த போதிலும் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை இருக்கும் என்றும் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது

எனவே பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 

மேலும் உங்களுக்காக...