CUET PG 2023: முதுகலை பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

Published:

முதுநிலை கல்லூரி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் முதுநிலை கல்லூரி படிப்பு படிப்பதற்கு பொது நுழைவு தேர்வு அவசியம் என்பது தெரிந்தது

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 19ஆம் தேதி வரை அதாவது இன்று வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ளி முதுநிலை கல்லூரி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வந்த நிலையில் தற்போது மே ஐந்தாம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

cuet1மேலும் முதுநிலை கல்லூரி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் மாதம் இதன் முடிவுகள் வெளியாகி ஆகஸ்ட் இரண்டாவது வாரம் 2023 – 24 கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதுநிலை கல்லூரி படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் மே ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்குள் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில் இந்த படிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்

முதலில் cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து CUET registration link என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.  அதன் பின் பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்.  விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி லாகின் செய்யவும்.  விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து அதன்பின் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, சமர்ப்பிக்கவும்.  பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 6 முதல் 8ஆம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s3d1a21da7bca4abff8b0b61b87597de73/uploads/2023/04/2023041911.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.

மேலும் உங்களுக்காக...