ஒரே வாரத்தில் சுமார் 1000 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. வாங்குவதற்கு சரியான நேரமா?

Published:

தங்கம் விலை ஒரே வாரத்தில் சுமார் 1000 ரூபாய் ஒரு சவரனுக்கு குறைந்துள்ளதை அடுத்து தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரமா என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளது.

தங்கம் வெள்ளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இடையில் சில நாட்கள் தங்கம் வெள்ளி விலை குறைந்தாலும் நீண்ட கால அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபமே கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மே 10ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ஆபரண தங்கம் 45, 936 என விற்பனையான நிலையில் இன்று அதே தங்கம் ஒரு சவரன் சென்னையில் 45,000 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. எனவே 10 நாட்களில் தங்கம் விலை ரூ.936 குறைந்துள்ளதால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களும் தங்கம் விலை குறைய குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி கொண்டே வந்தால் தங்கம் விலை ஏறும்போது மிகப்பெரிய லாபத்தை பார்க்கலாம் என தங்க நகை முதலீட்டு ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தங்கத்தில் எப்போது முதலீடு செய்தாலும் அது நீண்டகால அடிப்படையில் நல்ல லாபத்தை தான் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க சந்தையில் தங்கத்தின் விலை தற்போது சரிந்து வருவதால் தங்கம் விலை குறைவதாகவும் ஆனால் இந்தியாவில் அடுத்தடுத்து திருமணம் சீசன் வர இருப்பதை அடுத்து தங்கம் விலை இன்னும் சில நாட்களில் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...