தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

Published:

தமிழ்நாட்டில் இன்று 12 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கோடை காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று தமிழகத்தின் 14 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி அதிக வெப்பம் இருந்தது என்பது ஈரோட்டில் அதிக வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று 12 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summer

அதிகபட்சமாக கரூரில் 106.7 டிகிரி பதிவு ஆகி உள்ளதாகவும் ஈரோடு, வேலூர் ஆகிய பகுதிகளிலும் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்கும் போது இன்னும் உக்கிரமாக வெயில் அடிக்கும் என்றும் குறிப்பாக அக்னி நட்சத்திர நேரத்தில் 108 டிகிரி வரை வெயில் அடிக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே குழந்தைகள் முதியோர்கள் மற்றும் நோயாளிகள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் பழச்சாறுகள், அதிக அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு பொதுமக்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Summerமேலும் தேவையில்லாத பயணம் செய்ய வேண்டாம் என்றும் பெரும்பாலும் வீட்டுக்குள் இருந்து பணி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகளை வெயிலில் எந்த காரணத்தை முன்னிட்டும் அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...