10 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்டுக்கள்: ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

Published:

ஏப்ரல் 21ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் இன்று வழங்கப்பட்ட நிலையில் 10 நிமிடங்களில் ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டி என்றாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதும் குறிப்பாக சென்னையில் நடைபெறும் போட்டிகளை நேரில் பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் முன் வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்

சென்னை போட்டியை பார்ப்பதற்கு டிக்கெட்டுக்களை ஆன்லைனில் புக் செய்ய இன்று ரசிகர்கள் முயற்சி செய்தபோது பத்தே நிமிடங்களில் ஆன்லைனுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

chepauk 1ஏற்கனவே நேற்று இரவு முதல் மைதானத்தில் டிக்கெட் வாங்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்ற நிலையில் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய இன்டர்நெட் காலத்தில் எதற்காக கவுண்டரில் டிக்கெட் கொடுக்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. மொத்த டிக்கெட்டையும் ஆன்லைனில் வழங்கினால் ரசிகர்கள் எந்தவித சிரமமும் இன்றி வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இன்றி ஆன்லைனில் டிக்கெட் விலை புக் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு சில டிக்கெட்டுகளை மட்டுமே ஆன்லைன் ஒதுக்கிவிட்டு மீதமுள்ள அனைத்து டிக்கெட்டுகளையும் கவுண்டர்களில் கொடுக்கப்படும் என்ற முறை எதற்காக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கவுண்டர்களில் வழங்கினால் தான் டிக்கெட்டுகளை பதுக்க முடியும் என்றும் அதிக டிக்கெட்டுகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் விற்க முடியும் என்பதால் தான் இவ்வாறு நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனவே அடுத்த போட்டியிலிருந்து அனைத்து டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஆன்லைனில் தேவையானவர்கள் எத்தனை டிக்கெட்டுகளை வேண்டுமானாலும் புக் செய்து கொள்ளலாம் என்ற வழிமுறையை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...