மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… கிராம் ரூ.6000 எப்போது?

Published:

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர் ஏற்றதில் இருந்து வருகிறது என்பதும் ஒரு சில நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை உயர்ந்துதான் வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அமெரிக்க சந்தையில் தங்கத்தின் விலை பெரிய அளவில் உயரவில்லை என்றாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே செல்வதால் இறக்குமதி செய்யும் செலவுகள் அதிகமாவதால் தங்கத்தின் விலை இந்தியாவில் உயர்ந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

gold yellow metal precious meta

தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.81க்கும் அதிகமாக உள்ளது என்றும் 75க்கும் குறைவாக வந்தால் மட்டுமே தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிடியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் அந்த பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குதி வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 18 சதவீதமாக இருக்கும் இறக்குமதி வரி, 12 சதவீதமாக குறைக்க வாய்ப்பிருப்பதாகவும் வரிகள் குறைத்தால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

gold

இருப்பினும் தங்கத்தின் தேவை வரும் காலங்களில் அதிகமாக இருப்பதாலும் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் ஒரு கிராம் 6 ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்டும் என்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு கிராம் பத்தாயிரம் என்ற நிலையை எட்டும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ஐந்து ரூபாய் ஒரு கிராமுக்கு உயர்ந்து 5350.00 என விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் தங்கையின் 42800.00 என்ற விலைகள் விலை பட்டியல் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் குறைந்து 74.20 என்ற விலையில் ஒரு கிராம் வெள்ளி விற்பனையாகி வருகிறது என்பதும் 74 ஆயிரத்து 200 என ஒரு கிலோ வெள்ளி விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் 5712 என்றும், எட்டு கிராம் 45 ஆயிரத்து 696 இன்றும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...