தோல்வியை தாங்க முடியாமல் இருக்கும் அன்பில் மகேஷ்.. உதயநிதி ஆறுதல் கூறியும் சமாதானம் ஆகவில்லை.. ஆனால் விஜய்யின் ஒரே ஒரு செயல் அன்பில் மகேஷுக்கு உற்சாகம்.. மீண்டும் களத்தில் புத்துணர்ச்சியுடன் இறங்குகிறாரா முன்னாள் கல்வி அமைச்சர்?

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக தி.மு.க-வின் மிக முக்கியமான முகமாகவும், அதிகார மையமாகவும் வலம் வந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தோடு நெருங்கிய பந்தம் கொண்டவர் என்பது ஒருபுறமிருக்க,…

anbil mahesh

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக தி.மு.க-வின் மிக முக்கியமான முகமாகவும், அதிகார மையமாகவும் வலம் வந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தோடு நெருங்கிய பந்தம் கொண்டவர் என்பது ஒருபுறமிருக்க, தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நிழலாகவும் மிக நெருங்கிய நண்பராகவும் அடையாளப்படுத்தப்பட்டவர்.

கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்த காலங்களில் கட்சியிலும் ஆட்சியிலும் பெரும் செல்வாக்குடன் செயல்பட்டு வந்த இவருக்கு, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி ஈடு செய்ய முடியாத ஒரு பேரிடியாக அமைந்தது. தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் கிடைக்காதது மட்டுமின்றி, மக்கள் தன்னை நிராகரித்துவிட்டார்களோ என்ற எண்ணம் அவரை பெரிதும் வாட்டியதாக கூறப்படுகிறது.

இந்தத் தோல்வியிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த அன்பில் மகேஸை, அவரது நண்பர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசி தேற்றியுள்ளார். “தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்; இது ஒரு தற்காலிகமான பின்னடைவுதான்” என பலமுறை உதயநிதி ஆறுதல் கூறியும், அன்பில் மகேஸின் முகத்தில் மகிழ்ச்சி தென்படவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரத்தின் உச்சியில் இருந்த ஒருவர், சட்டமன்றத்தில் கூட உறுப்பினராக இல்லாமல் இருப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் திருச்சியிலேயே முடங்கி கிடந்த அவர், கட்சி நிகழ்ச்சிகளிலும் முன்பை போல உற்சாகம் காட்டாமல் மௌனம் காத்து வந்தார்.

இப்படியான ஒரு சூழலில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தொடர்பாக வெளியான ஒரு தகவல் அன்பில் மகேஸுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்ய இருக்கும் இந்தச் செய்தி அன்பில் மகேஸின் காதுகளுக்குச் சென்றவுடன், அவர் ஒருவித உற்சாகம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. முடங்கிக் கிடந்த அவரது அரசியல் வேகம் இப்போது மீண்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது.

உண்மையில், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலேயே திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதுதான் அன்பில் மகேஸின் முதல் விருப்பமாக இருந்தது. ஆனால், அப்போதைய கூட்டணிக் கணக்குகளால் அந்தத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் திருவெறும்பூர் தொகுதிக்கு மாற்றப்பட்டார். கடந்த பத்து ஆண்டுகளாக அந்தத் தொகுதியில் அவர் கவனம் செலுத்தினாலும், திருச்சி மாநகரின் மையப்பகுதியான கிழக்குத் தொகுதியின் மீது அவருக்கு எப்போதும் ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது. தற்போது தற்செயலாக உருவாகியிருக்கும் இந்த வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடக் கூடாது என்பதில் அவர் மிக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையிலும், அன்பில் மகேஸ் இப்போதே தனது தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டார். அந்தத் தொகுதியில் உள்ள ஜாதி ரீதியான வாக்குகள், தி.மு.க-வின் பலம் மற்றும் பலவீனம் குறித்து ரகசியமாகத் தகவல்களைச் சேகரிக்க தனது ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளாராம். ஒருவேளை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைவதோடு மட்டுமல்லாமல், தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்க இதுவே சரியான தருணம் என அவர் கருதுகிறார். திருச்சி உடன்பிறப்புகளும் தங்கள் மாவட்டத்தின் “பவர்ஃபுல்” தலைவர் மீண்டும் களத்திற்கு வருவதைக் காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.