எடப்பாடி பழனிசாமி முதல்வர், விஜய் துணை முதல்வர்.. இரு கட்சிக்கும் 117 தொகுதிகள்: பிரசாந்த் கிஷோர்

  எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராகவும், விஜய் துணை முதல்வர் வேட்பாளராகவும் இரண்டு கட்சிகளும் தலா 117 தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கூறியிருப்பதாக தகவல் வெளியானது.…

eps vijay

 

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராகவும், விஜய் துணை முதல்வர் வேட்பாளராகவும் இரண்டு கட்சிகளும் தலா 117 தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கூறியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் விஜய் தான் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவிடம் பிரசாந்த் கிஷோர் கூட்டணி குறித்து ஆலோசனை செய்ததாகவும், அதிமுகவுக்கு 25% வாக்குகள் இருக்கும் நிலையில், விஜய்க்கு 20% வாக்குகளை பெற முடியும் என்றும் கூறியதாகவும், இரண்டு கட்சிகளும் சேர்ந்தால் கண்டிப்பாக 50% வாக்குகளை பெறலாம் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது.

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராகவும், நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வராகவும் இருக்கும் முறை போலவே, தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதவியும், விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்க ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு கிட்டத்தட்ட எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இரு கட்சிகளுக்கும் தலா 117 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், அதன் பின்னர் இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்றும் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது.

இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.