தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்குமா? மத்திய அரசு எழுதிய முக்கிய கடிதம்!

By Bala Siva

Published:

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசிடம் மத்திய அரசு இது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட்டி தேர்வு வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த தேர்வை கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகிறது என்பதும் ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி நீட் தேர்வுக்கு விலக்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்ன தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா இயற்றப்பட்டது என்பதும் இந்த மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கவர்னர் அனுப்பி வைத்த இந்த மசோதாவிற்கு விளக்கம் அளிக்க மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் சமீபத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

subramaniyan health minister

இந்த நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துறை மீண்டும் நீட் தேர்வு விலக்கு குறித்து விளக்கம் அளிக்க தமிழக சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதம் குறித்து விரைவில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து விளக்கம் அளிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு பெற்றுத் தருவோம் என வாக்குறுதி கொடுத்து தான் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இன்னும் நீட் தேர்வு விலக்கு குறித்து எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசிடம் போராடி நீட் தேர்வுக்கு தமிழக அரசு விலக்கு பெற்று தருமா அல்லது இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு தோல்வி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படி ஆகினும் இதுவரை மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பது தான் உண்மை.