நயன்தாரா பாணியில் ஹன்சிகா… முன்னணி ஓடிடியில் திருமண வீடியோ

Published:

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமண வீடியோவை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று வாங்கி இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஹன்சிகாவின் திருமண வீடியோவையும் முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று வாங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார் என்றும் அவரது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த நிலையிலும் இன்னும் அவருடைய திருமண வீடியோ வெளியாகவில்லை என்பதும் அந்த வீடியோ எதனால் வெளியாகவில்லை என்பது குறித்த விளக்கமும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

hansika marriage4

இந்த நிலையில் நயன்தாராவை அடுத்த பிரபல நடிகை ஹன்சிகா கலந்து சில நாட்களுக்கு முன்னால் தனது நீண்ட நாள் காதலர் ஷோகேல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் இந்த திருமணம் நடைபெற்றது என்பது பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் இந்த திருமண விழாவில் கண்டுகொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோவையும் முன்னணி ஓடிடி நிறுவனமான ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஹன்சிகாவின் திருமணம் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

hansika marriage1இந்த திருமண வீடியோ குறித்த டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஹன்சிகாவின் ’லவ் ஷாதி ட்ராமா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹன்சிகா மற்றும் அவரது கணவர் ஷோஹேல் ஆகிய இருவரும் திருமண வாழ்க்கையை தொடரும் காட்சிகளிலிருந்து திருமணம் முடியும் வரை அனைத்து காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக திருமணத்தை திட்டமிடுவது தொடங்கி வடிவமைப்பாளர்கள் குடும்பங்கள் வாழ்த்து தெரிவிக்கும் வரை இந்த வீடியோவில் அடங்கியுள்ளது.

மேலும் ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் இந்த திருமணம் நடந்தபோது நிகழ்ந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகும் தேதியை விரைவில் ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வீடியோ வெளியாவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/CnjgWHcjrZU/

மேலும் உங்களுக்காக...