தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருகிறார் என்பதையும் அவரது ஒவ்வொரு பேட்டியும் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
திமுகவுக்கு எதிராக அவர் தினந்தோறும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியா? அல்லது அண்ணாமலையா என்ற சந்தேகமே பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவை பொருத்தவரை தமிழகத்தில் செல்லா காசாக ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது பாஜக தான் எதிர்கட்சி என்ற நிலைக்கு கொண்டு வந்ததற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நடை பயணம் செய்யப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் அண்ணாமலை அறிவித்த நிலையில் தற்போது நடைப்பயண தேதியை அறிவித்துள்ளார். ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் நடைபயணத்தை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து நடை பயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார் என்றும் இந்த பயணம் சென்னையில் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னால் கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கிய நிலையில் அதற்கு இணையாக அண்ணாமலையின் நடைபயணம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.