டிஆர் பாலு மீது மேலும் குற்றச்சாட்டு வைப்பேன்: அண்ணாமலை அதிரடி பேட்டி..!

 திமுக எம்பி டிஆர் பாலு, அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடுத்து இருக்கும் நிலையில் டிஆர் பாலு மீது மேலும் சில குற்றச்சாட்டுகளை வைப்பேன் என்று அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்றத்தில்…

Annamalai 010522 1200
 திமுக எம்பி டிஆர் பாலு, அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடுத்து இருக்கும் நிலையில் டிஆர் பாலு மீது மேலும் சில குற்றச்சாட்டுகளை வைப்பேன் என்று அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாராளுமன்றத்தில் அதிமுக எம்பி மைத்ரேகன் அவர்கள் கேள்வி எழுப்பிய போது டிஆர் பாலு அவர்களுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு குறைந்த விலையில் காவிரி படுகையிலிருந்து எடுக்கப்படும் கேஸ் வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் வற்புறுத்தியது ஏன் என்று கேள்வி கேட்டிருந்தார்
 அதை குறிப்பிட்ட அண்ணாமலை அவர்கள் தன்னுடைய சொந்த நலனுக்காக அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்த டிஆர் பாலு அவர்கள் என் மீது அவதூறு வழக்கு தொடர்வதற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை என்று கூறினார்.
மேலும் டிஆர் பாலு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் அதிகரிக்குமே தவிர ஒரு சதவீதம் குறையாது என்றும் அவர் தொடுக்கும் வழக்குகள் அனைத்தையும் சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிடிஆர் அவர்கள் சிறந்த நிதி அமைச்சர் ஆக செயல்பட்டு வந்தார் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே பாராட்டு பத்திரம் கொடுத்த நிலையில் திடீரென அவரை பதவியில் இருந்து விளக்க வேண்டிய காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.