விஷாலே அரசியலுக்கு வரும்போது விஜய் வரக்கூடாதா? தாராளமாக வரலாம்.. செல்லூர் ராஜூ..!

Published:

விஷாலே அரசியலுக்கு வரும்போது விஜய் வரக்கூடாதா என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் இருந்து நிறைய நடிகர் அரசியலுக்கு வந்துள்ளனர் என்பது தெரிந்ததே. எம்ஜிஆர் சிவாஜி ஜெயலலிதா சரத்குமார் கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள் என்பதும் ஆனால் ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதும் தெரிந்ததே.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது அவருக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. ஆனால் அவரது உடல் நலம் குன்றியவுடன் அவரது கட்சியும் மங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay 4
Vijay 4

மேலும் அடுத்ததாக விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் ரசிகர்களின் ஆதரவு காரணமாக அவர் அரசியலுக்கு வரலாம் என்றும் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அவர் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் விஜய் மட்டும் இன்றி விஷால் உள்பட வேறு சில நடிகர்களும் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்வி கேட்டபோது ’ஒரு சில வெற்றி படங்கள் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வந்துள்ளார் பல வெற்றி படங்கள் கொடுக்கும் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளை கிட்டத்தட்ட செய்து முடித்து விட்டார் என்பதும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் அவர் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...