அண்ணாமலைக்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார்? ரஜினி, விஜய், அண்ணாமலை கூட்டணியா?

  பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை தூக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள அண்ணாமலை பல முயற்சிகள் செய்து வருவதாக புறப்படுகிறது. ஆர்எஸ்எஸ் தரப்பிடமிருந்து தனக்கு…

annamalai

 

பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை தூக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள அண்ணாமலை பல முயற்சிகள் செய்து வருவதாக புறப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் தரப்பிடமிருந்து தனக்கு ஆதரவாக குரல் கொடுக்க அவர் கேட்டுக் கொண்டதாகவும், அதேபோல் கர்நாடக மடத்திடமும் அவர் தனக்காக பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக மடமும் பாஜக மேல் இடத்தினரிடம் தேர்தல் ஒரு வருடம் இருக்கும்போது பாஜக தலைவரை மாற்றினால் குழப்பம் ஏற்படும் என்று கூறியிருக்கிறாராம்.

இந்த நிலையில் தான் சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த அண்ணாமலை ஆதரவாளர்கள், அண்ணாமலைக்கு ஆதரவாக மேலிடத்தில் பேசுமாறு கூற, அவரும் பார்க்கலாம்” என்று சொன்னதாக கூறப்படுகிறது.

தனக்கு தெரிந்த அத்தனை வழிகளிலும் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள அண்ணாமலை முயற்சி செய்வதாக கூறப்பட்டாலும், பாஜக தலைவர் பதவி மாற்றுவது கிட்டத்தட்ட உறுதி என்றும், பொன் ராதாகிருஷ்ணன் அல்லது நயினார் நாகேந்திரன் — இவர்கள் இருவரில் ஒருவரே அடுத்த பாஜக தலைவர் எனவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், “பாஜகவுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தேன், இந்த கட்சியை பட்டிதொட்டியெங்கும் நான்தான் கொண்டு சென்றேன், ஆனால் எனக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள்” என்று தனது ஆதரவாளர்களிடம் அண்ணாமலை புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தான், அண்ணாமலை மற்றும் விஜய் கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது. விஜய் கட்சியில் இணைவது அல்லது தனி கட்சி ஆரம்பித்து, விஜய்யுடன் கூட்டணி வைப்பது, இந்த இரண்டில் ஒன்று நடக்கலாம் என்றும், இந்த கூட்டணிக்கு சூப்பர் ஸ்டார் ஆதரவு தரலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக, திமுக இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகம் ஊழல் இல்லாத முன்னேற்ற பாதையில் செல்லும் என்று ரஜினி பலமுறை தனது ஆதரவாளர்களிடம் கூறிய நிலையில், விஜய் மற்றும் அண்ணாமலை இணைந்தால் அந்த கூட்டணிக்கு அவர் ஆதரவு தரலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த செய்திகள் எல்லாம் சமூக வலைதளங்களில் மட்டுமே வந்து கொண்டிருப்பதால், இவற்றில் எது உண்மை, எது கற்பனை என தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அரசியல் பார்வையாளர்கள் கூட குழப்பத்தில் உள்ளனர்.

தேர்தல் வரை அடுத்தடுத்து என்ன திருப்பம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அனைவரும் ஒரு த்ரில்லுடன் தமிழக அரசியலை பார்த்து வருகின்றனர்.