அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியா? மீண்டும் திமுகவுக்கு சிக்கல்..!

  தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்றி, வேறு புதிய தலைவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையை மாற்றினால் தான் அதிமுக கூட்டணியில் பாஜக இணைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி…

1851206 annamalai1

 

தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்றி, வேறு புதிய தலைவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையை மாற்றினால் தான் அதிமுக கூட்டணியில் பாஜக இணைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அண்ணாமலைக்கு டெல்லியில் ஒரு முக்கிய பதவி, குறிப்பாக மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அண்ணாமலை கேபினட் அமைச்சர் ஆனால், தமிழகத்திற்கு மீண்டும் சிக்கல் என்றே கூறப்படுகிறது. குறிப்பாக, திமுக அரசுக்கு சிக்கல் என சொல்லப்படுகிறது.

அண்ணாமலையின் கீழ் இருக்கும் அமைச்சரவையில் ஏதாவது காரியம் நடைபெற வேண்டுமெனில், திமுக அரசு நேரடியாக அண்ணாமலையையே அணுக வேண்டிய நிலை ஏற்படும், அவர் எப்படி அணுகுவார் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

அண்ணாமலையைப் பொறுத்தவரை, இன்னும் 30 ஆண்டுகளுக்கு அவர் அரசியலில் வலிமையாக இருப்பார் என்றும், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர், பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா ஆகியோருக்கு நெருக்கமானவர் என்பதால் பாஜக அவருக்கு உரிய மரியாதை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், தமிழக பாஜக தலைவராக வானதி சீனிவாசன் அல்லது பொன் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக பொன் ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.