கனவுகளே… ஆயிரம் கனவுகளே.. 6 தொகுதியில் நின்று 4 எம்.எல்.ஏக்கள் வேணுமா? துணை முதல்வர் பதவி வேணுமா? திருமாவுக்கு ஈபிஎஸ் கொடுக்கும் ஆஃபர்..!

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தற்போது திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள்கூட அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்ற…

vijay thirumavalavan eps

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தற்போது திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள்கூட அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. அந்த வகையில், அதிமுக – பாஜக கூட்டணி விரிக்கும் முதல் வலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத்தான் என்று கூறப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், அதில் அதிகபட்சமாக நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், “எங்கள் கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி கிடைக்கும், 15 தொகுதிகள் கிடைக்கும், அதில் சில பொதுத் தொகுதிகளும் கிடைக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“இன்னும் எத்தனை காலத்துக்கு இன்னொருவர் முதல்வராகக் கட்சி நடத்துவீர்கள்? நீங்களே துணை முதல்வராகுங்கள்!” என்று எடப்பாடி பழனிசாமி கொடுக்கும் இந்த வாய்ப்பை திருமாவளவன் ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் திருமாவளவன் அந்த கூட்டணிக்கு செல்வதில் தர்மசங்கடம் ஏற்படும். ஆனால், “ஒரே கூட்டணியில் சிவசேனாவும் திமுகவும் இருக்கும்போது ஏன் பாஜக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கக் கூடாது?” என்று அதிமுக தரப்பில் இருந்து வாதிடப்படுகிறது. சில நிபந்தனைகளுடன் இந்த கூட்டணியில் திருமாவளவன் இணைந்து கொள்வார் என்றுதான் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கும் துணை முதல்வர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், விஜய் மற்றும் திருமாவளவன் துணை முதல்வராகவும், பிற கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கிய அமைச்சர் பதவிகள் போன்ற சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த முறை திமுகவை வீழ்த்தவில்லை என்றால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும், எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை ஏற்றதிலிருந்து இன்னும் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாததால், இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் கூறப்படுவதால், அவர் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க தயாராகிவிட்டதாகப் பேசப்படுகிறது.

ஒருவேளை, தமிழக வெற்றி கழகமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதிமுக கூட்டணிக்கு சென்றுவிட்டால், அந்தக் கூட்டணி வலுவாகிவிடும். அதோடு, தேமுதிக, ஜான் பாண்டியன் கட்சி, பாரிவேந்தர் கட்சி, புதிய தமிழகம், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்தால் நிச்சயம் ஆட்சியைப் பிடித்துவிடும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வர் என்ற பதவிக்காக திருமாவளவன் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்வாரா? அல்லது கொள்கை பிடிப்புடன் திமுக கூட்டணியில் தொடர்வாரா என்பதை இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.