ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு.. என்ன ஆகும்?

Published:

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த சட்டத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல் செய்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிர்கள் பலியாகி உள்ளதால் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இன்று சட்டத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என கவர்னர் ரவி அனுப்பிய நிலையில் திருத்தம் செய்யாமல் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்ட கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இதனை அடுத்து கவர்னர் ரவி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதனைஅடுத்து தற்போது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

ஆன்லைன் தடை சட்டத்தை தடை விதிக்க வேண்டும் என்றும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி ஆகியோர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் இதனை முறையை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவித்தனர். இதனை அடுத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பிலிருந்து நாளை மனுவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் என்ன ஆகும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...