பரந்தூரை பற்றி இனி யாரும் வாயைவே திறக்க கூடாது.. கடந்த 3 ஆண்டுகளில் பரந்தூரை சுற்றி நிலங்கள் வாங்கியது யார் யாருன்னு ஒரு வெள்ளை அறிக்கை வரப்போகுது.. இதுல என்ன கொடுமைன்னா ரெண்டு கட்சியை சேர்ந்தவங்களும் வளைச்சு வளைச்சு வாங்கியிருக்காங்களாம்..ஆகஸ்ட் 26, 2026, 18:59
நிதி, கரண்ட், விவசாயம்னு எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு இப்போ சாமி சொத்து பக்கம் கை வச்சிருக்கோம்! கோயில் காசுல குபேரனானவங்க லிஸ்ட் எல்லாம் ‘வெள்ளை அறிக்கை’யா வெளில வரப்போகுது… இனிமே ஒரு பைசா கூட ஆட்டைய போட முடியாது! ஆட்டைய போட்டவங்களும் தப்பிக்க முடியாது.. பெரிய கோயிலோட பணத்தை எடுத்து, ஒரு கால பூஜைக்கு வழியில்லாத சின்ன கோயிலுக்கு கொடுக்கப்போறோம்! ஆன்மீகத்துல அரசியல் பண்ணி பழகியவங்களுக்கு மத்தியில… இது நம்ம கவர்மெண்ட்டோட ‘மாஸ்’ ஆன்மீக புரட்சி!ஜூன் 29, 2026, 10:46
ஒரு டிபார்ட்மெண்டுக்கு ஒரு வெள்ளை அறிக்கை? நிதி, மின்சாரத்தை அடுத்து பத்திரப்பதிவு துறைக்கு ஒரு வெள்ளை அறிக்கை.. கொஞ்சமாவா ஊழல் பண்ணியிருக்கிங்க? இவ்வளவு பணத்தை வச்சு அப்படி என்ன தான் பண்ண போறிங்க? உங்க ஆசைக்கு ஒரு அளவே இல்லையா? தவெக-வோட இந்த வெள்ளை அறிக்கைகள் நீங்க பண்ண துரோகத்தை உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் காட்டும்! மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க இந்த அரசை… உங்க எந்த சதியாலயும் ஒன்னும் பண்ண முடியாது!ஜூன் 28, 2026, 18:30
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க தமிழ்நாட்டை.. 3 ரூபாய் வருவாயில் 1 ரூபாய் வட்டி கட்டவே சரியாகி போயிடும்.. பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை சேர்த்தால் 13.18 லட்சம் கோடி கடன்… 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ. 5 லட்சம் கோடி.. கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன்.. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன்.. தமிழ்நாட்டை சீரழித்த திராவிட மாடல் அரசு…ஜூன் 16, 2026, 18:33