மூன்று முறை மிஸ் ஆன சுப்மன் கில் விக்கெட்.. தட்டி தூக்கிய தல தோனி..!

Published:

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் இறுதி போட்டியில் சுப்மன் கில் விக்கெட்டை தல தோனி ஸ்டம்பிங் செய்து தூக்கியதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

தீபக்சஹார் தவறவிட்ட கேட்ச், அதன் பின்னர் இரண்டு முறை ரன் அவுட் சான்ஸ் மிஸ் செய்யப்பட்டது என அதிர்ஷ்டத்தின்வாயிலாக சுப்மன் கில் தப்பித்து வந்த நிலையில் சுப்மன் கில்லை அபாரமாக தல தோனி ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை தூக்கினார்.

மூன்றாம் நடுவர் தீர்ப்பில் நூலிழையில் சுப்மன் கில் அவுட் ஆனது தெரியவந்துள்ளதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தல தோனிக்கு இந்த பெருமை அனைத்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில் விக்கெட்டை சிஎஸ்கே கேப்டன் தல தோனி தட்டி தூக்கி விட்டதை அடுத்து இனி சிஎஸ்கே வீரர்களுக்கு புதிய உற்சாகம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை சுப்மன் கில் அதிர்ஷ்டத்தின் மூலம் தப்பினாலும் தல தோனி மிக அபாரமாக ஸ்டெம்பிங் செய்துள்ளது அடுத்து இனி குஜராத் அணியின் ரன்களை சிஎஸ்கே கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...