சதத்தை நெருங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன்.. சிஎஸ்கேவுக்கு 215 இலக்கு..!

தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரமாக பேட்டிங் செய்து சதத்தை நெருங்கியதால் குஜராத் அணி 214 ரன்கள் குவித்துள்ளது

இன்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பெளலிங் தேர்வு செய்ததை அடுத்து குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கில் மற்றும் சாகா நல்ல தொடக்கத்தை கொடுத்த நிலையில், கில் அவுட் ஆனவுடன் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் 47 பந்துகள் மட்டும் சந்தித்து 96 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சாகா 54 ரன்கள் கில் 39 ரன்கள் அடித்தனர்.

இதனை அடுத்து 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குஜராத் அணி குவித்துள்ளது. பதிரனா 2 விக்கெட்டுகள் ஜடேஜா மற்றும் தீபக் சஹார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

இந்த நிலையில் 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய இருக்கும் நிலையில் இந்த இலக்கை எட்ட முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குஜராத் அணியை பொறுத்தவரை ஷமி, நூர் முகமது, மொஹித் வர்மா, ரஷித் கான் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே இவர்களது பந்துவீச்சை சிஎஸ்கே சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.