தோனியால் பொதுமக்களுக்கு ஆபத்து.. சேப்பாக்கத்தில் எச்சரிக்கை விடுத்த ஸ்மார்ட் வாட்ச்..!

By Bala Siva

Published:

நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தோனி மைதானத்தில் களம் இறங்கும்போது எழும் கரகோஷம் காரணமாக பொதுமக்களின் காதுகளுக்கு ஆபத்து என ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடந்தாலும் சரி அல்லது இந்தியாவில் உள்ள எந்த பகுதியில் போட்டியில் நடந்தாலும் சரி தல தோனி களத்தில் இறங்கும் போது பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்புவார்கள் என்பதும் அந்த கரகோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கும் என்பது தெரிந்ததே.

smartwatch

இந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் தல தோனி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியபோது மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கரகோஷமிட்டனர். தோனி.. தோனி என்று அவர்களது கரகோஷம் விண்ணை பிளந்தது.

அப்போது பார்வையாளர் ஒருவர் அது ஸ்மார்ட் வாட்சில் எச்சரிக்கை வருவதை பார்த்தார். அந்த எச்சரிக்கையில் திடீரென 90 டெசிமல் அளவிற்கு சத்தம் எழுகிறது என்று அது தற்காலிகமாக காது கேட்கும் திறனை இழக்க வைக்க அளவுக்கு இருக்கிறது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

90 டெசிமல் என்பது அளவுக்கு மீறியது என்பதால் பலருக்கு காது கேட்கும் திறன் இழக்கும் வாய்ப்பு இருப்பதாக ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை விடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இருப்பினும் தோனி வருகையின் போது ரசிகர்களின் கரகோஷத்தை நிறுத்துவதற்கு வழியே இல்லை என்பதால் இதை பொறுத்துதான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சேப்பாக்கத்தில் எழுப்பப்பட்ட இந்த கரகோஷ ஒலி ஒரு சில கிலோமீட்டருக்கு கேட்டது என்றும் அந்த அளவுக்கு கரகோஷத்தின் ஒலி அதிகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. தல தோனி மீது லட்சக்கணக்கான ரசிகர்கள் வெறித்தனமான அன்பு வைத்துள்ளதால் தான் இப்படி ஒரு கரகோஷம் எழுப்பப்படுகிறது என்றும் உலகில் எந்த ஒரு கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த அளவுக்கு கரகோஷம் எழுப்பப்பட்டது இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டது.