மூன்றே பந்துகள், மழை வந்ததால் ஆட்டம் நிறுத்தம்.. தொடர வாய்ப்பு உள்ளதா?

Published:

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 214 ரன்கள் குவித்துள்ளது. இதனை அடுத்து 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தொடங்கிய நிலையில் முதல் ஓவரில் மூன்று பந்துகள் மட்டுமே போடப்பட்ட நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதும் இல்லாத நிலையில் மூன்றாவது பந்தில் ருத்ராஜ் ஒரு பவுண்டரி அடித்தார். இதனை அடுத்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி நான்கு ரன்கள் என்ற நிலையில் உள்ளது.

rain ahmedabad

மழை சற்று அதிகம் பெய்து வருவதால் நிற்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது. ஐந்து ஓவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிவிட்டது என்றால் டக்வொர்த் லீவிஸ் முறையின்படி முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஆனால் 5 ஓவர்கள் கூட விளையாடாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்த அணி என்ற வகையில் குஜராத் அணி கோப்பையை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யுமா? வருண பகவான் வழி விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் 215 என்பது சற்று கடினமான இலக்கு தான் என்பதால் மழை நின்று ஓவர் குறைக்கப்பட்டு விளையாடினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சற்று அதிகமாகவே எதிர்பார்த்ததைவிட இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...