ஐபிஎல் வரலாற்று சாதனையை நூலிழையில் மிஸ் செய்த லக்னோ.. பொளந்து கட்டிய பேட்ஸ்மேன்கள்..!

Published:

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் என்ற இலக்கை நூலிழையில் லக்னோ அணி இன்று மிஸ் செய்துள்ளது.

இன்றைய ஐபிஎல் போட்டி லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் அது மிக தவறு என்பது சிறிது நேரத்திலேயே ஷிகர் தவான் உணர்ந்து இருப்பார். ஏனெனில் லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அடித்து விளையாட தொடங்கினர்

lsgஅந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேயர்ஸ் 54 ரன்கள் எடுத்தார். அதனை அடுத்து ஸ்டோனிஸ் 72 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 45 ரன்கள் எடுத்தனர். இறுதியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 257 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக ரன்கள் என்கிற சாதனையை பெங்களூர் அணி வைத்துள்ளது என்பதும் அந்த அணி 263 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 6 ரன்கள் லக்னோ அணி எடுத்திருந்தால் அந்த சாதனையை சமன் செய்திருக்கலாம் என்ற நிலையில் மிஸ் செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 258 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக ஸ்கோர் எடுத்த ஐந்து அணிகள் பின்வருமாறு:

263 – பெங்களூருvs புனே
257 – லக்னோ vs பஞ்சாப்
248 – பெங்களூரு vs  குஜராத்
246 – சென்னை vs ராஜஸ்தான்
245 – கொல்கத்தா vs பஞ்சாப்

மேலும் உங்களுக்காக...