இது இரட்டை சத சீசனா? டேவிட் வார்னரை அடுத்து இரட்டை சதம் அடித்த வில்லியம்ஸ்!

Published:

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற பாக்ஸிங் டே கிரிக்கெட் டெஸ்ட்டில் டேவிட் வார்னர் அதிரடி இரட்டை சதம் காரணமாக ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணிக்கு 438 ரன்கள் அடித்தது என்பதும், பாபர் அசாம் மற்றும் சல்மான் ஆகியோர் சதம் அடித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அதிரடியாக முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 612 ரன்கள் அடித்தது. இதில் வில்லியம்ஸ் 200 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாகிஸ்தான் தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது என்றும் அந்த அணி சற்று முன் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது என்றும் தற்போது அந்த அணி 108 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நாளையுடன் இந்த போட்டி முடிவடைய உள்ளதால் இந்த போட்டியை டிரா அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...