நெட் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது? யுஜிசி அறிவிப்பு!

By Bala Siva

Published:

நெட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது என்பது குறித்த தகவலை யுஜிசி சற்றுமுன் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு செல்ல முடியும் என்பதும் அதேபோல் ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் நெட் தேர்வு வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வளைதளத்தில் செய்த பதிவின்படி இந்திய பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசிரியர் யுஜிசி நெட் தேர்வு 2023ம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்வுக்கு டிசம்பர் 29 முதல் அதாவது இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இது குறித்த கூடுதல் தகவல் தெரிய வேண்டுமென்றால் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் உங்களுக்காக...