இது தோனியின் கடைசி சீசனா? மாற்றத்துக்கான நேரமா இது? முன்னாள் கிரிக்கெட் வீரர் கேள்வி..!

  கடந்த நான்கு சீசன்களாக எம்.எஸ். தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தொடர்ந்து நிலவி வந்துள்ளன. ஆனால், அனைத்து வதந்திகளையும் கடந்து, 2025 சீசனிலும் மஞ்சள் ஜெர்ஸி அணிந்து விளையாடிய அவர் தற்போது…

dhoni2

 

கடந்த நான்கு சீசன்களாக எம்.எஸ். தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தொடர்ந்து நிலவி வந்துள்ளன. ஆனால், அனைத்து வதந்திகளையும் கடந்து, 2025 சீசனிலும் மஞ்சள் ஜெர்ஸி அணிந்து விளையாடிய அவர் தற்போது கேப்டனாகவும் களமிறங்கியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இதுவரை நடந்த போட்டியில் ஒன்றில் கூட அவர் குறிப்பிட்டு சொல்லும் வகையில் பேட்டிங் செய்யவில்லை; அத்துடன் சென்னை அணி வெற்றி பெறவும் முடியவில்லை. இதனால், தோனி மற்றும் சென்னை அணி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தோனியை தூக்கி வைத்த கொண்டாடிய அவருடைய தீவிர ரசிகர்களே, “தோனி இன்னும் அணியில் இடம் பெற வேண்டுமா?” என கேள்வியெழுப்பவும் செய்கின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் முகம்மது கைப், தனது “X”கணக்கில், “இது தோனியின் கடைசி சீசனா? சென்னை அணியின் நிலைமையைப் பார்த்தால், மாற்றத்துக்கான நேரமா இது? என தெரிகிறது. நம்முடைய ஒரே கேள்வி என்னவெனில், ‘நமக்கே ஸ்பின்னர்கள் இல்லாத நிலையில், எதிரணியில் நரைன், வருண் போன்றவர்கள் இருக்க, ஏன் ஸ்லோ பீட்ச் தர்றீங்க?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

KKR அணியிடம் தோல்வியடைந்த பின், பேட்டியில் தோனி கூறியதாவது: “இந்த சீசனில் பல போட்டிகள் எங்கள் பக்கம் வரவில்லை. இது ஒரு சவாலான நேரம். அந்த சவால்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. இன்று என் எண்ணத்தில், எங்கள் ஸ்கோர் போதவில்லை. 2வது இன்னிங்ஸில் பந்து சற்று பிடிப்பது போன்ற நிலைமை இருந்தது, ஆனால் இன்று அது முதல் இன்னிங்ஸிலேயே ஏற்பட்டது. அதிக விக்கெட்டுகளை இழந்தால், அழுத்தம் ஏற்பட்டது. எதிரணியில் தரமான ஸ்பின்னர்கள் இருந்ததால் இன்னும் கடினமாகியது. எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை.

இந்த நிலைஇயில் சென்னை அணி அடுத்ததாக ஏப்ரல் 14-ம் தேதி லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கடும் அழுத்தத்தில் தோனி அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.