45 ரன்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. 145 ரன்கள் இலக்கை எட்டுமா?

Published:

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 145 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நிலையில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி 227 ரன்கள் எடுத்தது என்பதும் அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ban vs ind1இதனை அடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சில் விளையாடிய நிலையில் இந்தியா 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து தற்போது 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்திய அணி இதுவரை 23 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் இன்னும் சுமார் 100 ரன்கள் வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் 7 மட்டும் 2 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில் இந்த புஜாரே 6 ரன்களிலும், விராட் கோலி ஒரு ரன்களிலும் அவுட் ஆகி உள்ளனர். தற்போது அக்ஷர் பட்டேல் மற்றும் உனாகட் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...