3 T20 போட்டிகள் கொண்ட தொடரினை இந்தியா-இங்கிலாந்து மேற்கொண்டு வருகிறது. இந்த தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதன் இறுதிக்கட்டமாக மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இதில் டாசை வென்ற இங்கிலாந்தின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஏனென்றால் முதல் இரண்டு ஆட்டங்களில் டாசை வென்றாலும் கூட முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியே வெற்றி பெற்றது.
இந்த யுக்தியை அறிந்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த முடிவு தற்போது இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனென்றால் 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் எடுத்து இந்தியா பவுலர்களை சரமாரியாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து துவம்சம் செய்தனர்.
இங்கிலாந்தில் அதிகபட்சமாக மலன் 77 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா சற்று தடுமாற்றத்தோடு ஆட்டத்தை ஆரம்பித்தது.
முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை பறி கொடுக்க நிதானமாக ஆடிய சூரியகுமார் யாதவ் அபாரமாக சதம் விலாசினார். ஆயிரம் கூட அவர் 19வது ஓவரில் கடைசி பந்தில் தனது விக்கெட்டை இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர் மொயின் அலியிடம் பறிகொடுத்தார்.
எனவே 20 ஓவர் முடிவில் இந்தியா இலக்கை எட்ட முடியாமல் 198 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும் கூட தொடரை இந்தியா தான் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
எனவே சொந்த மண்ணில் ஆறுதலுக்காவது ஒரு வெற்றி கிடைத்ததாக இங்கிலாந்து அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.