தமிழகம்

#BREAKING இடைக்கால பொதுச்செயலாளரானார் ஈபிஎஸ்; தொண்டர்கள் உற்சாகம்!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழுவில் 16 தீர்மானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதில் முதல் தீர்மானமான அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்ந்தல் 4 மாதங்களுக்குள் நடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்களை  நந்தம் விஸ்வநாதன் முன்மொழிய முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார்.

Avatar photo
Amaravathi