வாயடைத்து போன பவுலர்கள்! – வெறும் 49 பந்துகளில் சதம்; சூர்யகுமார் யாதவ் அதிரடி..!!

Published:

நம் இந்திய அணி தற்போது இங்கிலாந்துடன் மூன்று ஒருநாள் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்தில் நடைபெற்று கொண்டு வருகிறது.

இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றியது. இருப்பினும் கூட மூன்றாவது போட்டியான இன்றைய தினம் டாசை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் எடுத்து இமாலய இலக்கை இந்தியாவுக்கு கொடுத்துள்ளது. இந்திய அணியின் வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழக்க நிதானமாக ஆடிய சூரியகுமார் யாதவ் தற்போது அபாரகரமாக சதம் விலாசி இந்தியாவை வெற்றியின் விளிம்புக்கு கொண்டு சேர்த்து உள்ளார்.

இந்த சூரியகுமார் யாதவ் பலமுறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வெற்றியினை பெற்றுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டு வருகிறார்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment