ஐபிஎல் மூலம் பிரபலமாகும் வீரர்கள் இந்திய அணியிலும் பட்டையை கிளப்பி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பலரும் அறிந்ததே. அந்த வகையில், தற்போது இந்திய ஏ அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கு மூன்று ஐபிஎல் வீரர்கள் அட்டகாசமாக விளையாடி, ரன்களை இமாலயா அளவுக்கு உயர்த்தி உள்ளனர்.
இந்தியா ஏ அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், அங்கு லயன் அணியுடன் இரண்டு போட்டிகளிலும், இந்திய அணியுடன் ஒரு போட்டியிலும் விளையாட உள்ளது.
இந்த நிலையில், நேற்று ஆரம்பித்த இந்தியா ஏ – லயன் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி பேட்டிங் செய்த போது, கருண் நாயர் அபாரமாக விளையாடி 204 ரன்கள் அடித்தார்; சர்ஃப்ரஸ் கான் 92 ரன்கள், துருவ் ஜுரல் 94 ரன்கள் அடித்துள்ள நிலையில், இந்திய ஏ அணி 125 ஓவர்களில் 557 ரன்கள் எடுத்துக் கொண்டு ஆட்டம் இழந்து உள்ளது.
இதில் அபாரமாக விளையாடிய மூன்று வீரர்களுமே ஐபிஎல் மூலம் புகழ்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கருண் நாயர் ஏற்கனவே பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகளில் விளையாடிய நிலையில், தற்போது டெல்லி அணிக்கு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சர்ப்ரைஸ் கான் பெங்களூரு, பஞ்சாப், டெல்லி ஆகிய அணைகளுக்கு விளையாடி உள்ளார். துருவ் ஜூரல் ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் மூலம் தங்கள் திறமையை நிரூபித்த இந்த மூன்று வீரர்களும் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலும் கலக்கி வருவதால், இவர்களுக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறப்படுகிறது.