ஐபிஎல் 2023: பெங்களூரை பிரித்து மேய்ந்த டெல்லி..!

Published:

இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஐம்பதாவது போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 55 ரன்கள், லோம்ரர் 54 ரன்கள் எடுத்தனர்

dc vs rcb

இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி மிக அபாரமாக விளையாடி 16.4 ஓவர்களில் 187 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து டெல்லி அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் டெல்லி வென்றதன் மூலம் அந்த அணியின் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரங்கள்:

பெங்களூரு: 181/4

விராத் கோஹ்லி: 55
லோம்ரர்: 54
டூபிளஸ்சிஸ்: 45

டெல்லி: 187/3

சால்ட்: 87
ரோஸ்ஸோ: 35
மார்ஷ்: 26

 

மேலும் உங்களுக்காக...