குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி பெற்ற டெல்லி அணி.. ஐதராபாத்துக்கு தொடர் தோல்வி..!

Published:

நேற்றைய போட்டியில் டெல்லி அணி குறைந்த ஸ்கோர் அடித்து அந்த ஸ்கோரையும் ஹைதராபாத் அணியை அடிக்க விடாமல் வெற்றி பெற்றதை அடுத்து 2023 ஐபிஎல் தொடரில் குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை டெல்லி அணியை பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 145 என்ற எளிய இலக்கை நோக்கி ஹைதராபாத் விளையாடிய குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 49 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்த போதிலும் அந்த அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் கை கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் கிளாசன் அதிரடியாக 31 ரன்கள் அடித்த போதிலும் அவராலும் இலக்கை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

dc vs srhஇதனை அடுத்து ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்ததால் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து டெல்லி அணிக்கு இரண்டாவது வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஹைதராபாத் அணிக்கு தொடர்ச்சியாக மூன்று தோல்விகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு அணிகளுமே புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் உள்ளதால் இதில் எந்த அணியை கடைசி இடத்தை பிடிக்கும் என்ற போட்டிதான் தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு அணிகளுமே அடுத்த சுற்று செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது.

தற்போது டெல்லி. ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளுமே 2 வெற்றி பெற்று 5 தோல்விகளை பெற்று இருந்தாலும் புள்ளி பட்டியலில் டெல்லி அணி பத்தாவது இடத்திலும் ஹைதராபாத் அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மற்றும் ஹைதராபாத் அணி 9 மற்றும் 10வது இடத்தை விட்டு முன்னேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...