டி20 கிரிக்கெட் வரலாற்றில் 32 ரன்களில் ஆல் அவுட் ஆன வங்கதேச அணி மோசமான சாதனைகளில் ஒன்றை பதிவு செய்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று நடைபெற்ற வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து வங்கதேச அணி 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய நிலையில் அந்த அணி 32 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 6 ரன்கள் உதிரியாக கிடைத்தது என்பதால் வங்கதேச அணியின் வீராங்கனைகள் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நியூசிலாந்து அணி மிக அபாரமாக 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குமுன் 2020 ஆம் ஆண்டு வங்கதேசம் மற்றும் மாலி ஆகிய பெண்கள் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெறும் 6 ரன்களுக்கு மாலி பெண்கள் கிரிக்கெட் அணி ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தற்போது வங்கதேச அணி 32 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.