ஒரு நாள் போட்டியில சச்சின்.. டி20 ல கோலி.. அந்த வரிசையில் டெஸ்ட் அரங்கில் அஸ்வின் பிடித்த இடம்..

By Ajith V

Published:

த்மிழகத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் அரிதாகவே வீரர்கள் இடம்பெற்று வரும் சூழலில், அதில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளவர் தான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய வரும் சூழலில் தற்போது டெஸ்ட் தொடரில் மட்டும் தவறாமல் இடம் பிடித்து வருகிறார்.

அஸ்வினுக்கு பின்னர் நிறைய தமிழக இளம் வீரர்கள் இந்திய அணியில் இணைய துடிப்பாக செயல்பட்டு வருதற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். சுழற்பந்துவீச்சாளராக டெஸ்ட் ரங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், முக்கியமான நேரத்தில் இந்திய அணி ரன் சேர்க்க முடியாமல் திணறும் போது பேட்ஸ்மேனாகவும் உருவெடுத்து அதிலும் தனது திறனை அசத்தலாக வெளிப்படுத்தி உள்ளார்.

100 டெஸ்ட் போட்டிகள் ஆடி ஆறு சதம் அடித்துள்ள அஸ்வின் சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டிலும் சதமடித்திருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் ரன் குவிப்பில் ஈடுபட காரணமாக இருந்ததுடன் தனது ஆறாவது சத்த்தை பூர்த்தி செய்த அஸ்வின், பவுலிங்கிலும் கலக்கி இருந்தார்.

டெஸ்ட் ல் ரவுண்டர்ள் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், சுழற்பந்து வீச்சாளராகவும் நிறைய சாதனைகளை செய்துள்ளார். எந்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்தாரோ அதே போட்டியில் ஆறு விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ய காரணமாக அமைந்திருந்தார்.

அது மட்டுமில்லாமல், ஒரே போட்டியில் சதமடித்து ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி இருந்ததுன் சில முக்கிய சாதனைகள் பட்டியலிலும் தவறாமல் இடம்பிடித்து இருந்தார். அப்படி ஒரு சூழலில் தான் தற்போது விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரை போல அஸ்வினும் டெஸ்ட் அரங்கில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணியை பொறுத்த வரையில் ஒரு நாள் போட்டியில் தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருது என இரண்டையும் அதிக முறை எடுத்தவர் சச்சின் டெண்டுல்கர் தான். இவர் ஒரு நாள் போட்டிகளில் 77 முறை ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரண்டையும் சேர்த்து எடுத்துள்ளார். இதேபோல டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பில், விராட் கோலி 23 முறை எடுத்துள்ளார்.

அந்த வரிசையில் தான் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அரங்கில் 20 முறை இந்திய அணிக்காக ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை சேர்த்து வென்றுள்ளார். இதில் முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று அஸ்வின் முறியடித்து முதல் இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் தொடர் நாயகன் விருதினை 10 முறையும், ஆட்ட நாயகன் விருதினை 10 முறையும் அஸ்வின் வென்றுள்ளார்.