மெய்யழகன் டிரைலர் எப்படி இருக்கு..? கைகொடுக்குமா கார்த்தி – அர்விந்த் சாமி காம்பினேஷன்?

நடிகர் கார்த்திக்கு எப்பவுமே கிராமத்துக் கதைதான் கைகொடுக்கும் போல. டிரைலரிலேயே தனது தனது வெற்றிக்கு அச்சாரமிட்டிருகிறார் கார்த்தி. ஆம். கார்த்தி-அர்விந்த்சாமி நடிப்பில் உருவாகியிருக்கும் மெய்யழகன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 அன்று உலகம் முழுக்க…

Meiyazhagan

நடிகர் கார்த்திக்கு எப்பவுமே கிராமத்துக் கதைதான் கைகொடுக்கும் போல. டிரைலரிலேயே தனது தனது வெற்றிக்கு அச்சாரமிட்டிருகிறார் கார்த்தி. ஆம். கார்த்தி-அர்விந்த்சாமி நடிப்பில் உருவாகியிருக்கும் மெய்யழகன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது.

ஏற்கனவே படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் டீசர் வெளியான நிலையில் இன்று டிரைலர் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே டீசரை முதன் முதலாகத் தமிழில் கிளர்வோட்டம் எனவும், வெளியீட்டுத் தேதியை புரட்டாசி 11 எனவும் அறிவித்து கவனத்தை ஈர்த்தது படக்குழு.

96 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குநர் பிரேம்குமார் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இசை கோவிந்த் வசந்தா. பெரும்பாலும் 96 படத்தில் ஒரு அமைதியும், அவ்வப்போது வரும் மெல்லிய வயலின் இசையும், இளையாராஜாவின் பாடல்களும் படத்திற்குப் பெரிதும் சேர்த்தது. மெய்யழகன் படத்திலும் கார்த்தி அவ்வப்போது பழைய பாடல்களைப் பாடியும், அர்விந்த்சாமியுடன் கலகலப்பான காட்சிகளிலும் கவனத்தை ஈர்க்கிறார்.

கார்த்திக்கு பருத்தி வீரன், கொம்பன், விருமன், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அந்த வகையிலும் மெய்யழகன் இணைந்துள்ளது. அர்விந்த் சாமி இன்னும் இவரைப் போல் மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு வயசானாலும் அழகில் சற்றும் குறையவில்லை. யதார்த்தமான நடிப்பு ஆகியவற்றால் திரையில் ஸ்கோர் செய்கிறார். மேலும் ஹீரோயினா ஸ்ரீ திவ்யா நடித்திருக்கிறார். மேலும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரன் நடித்திருக்கிறார்.

தமிழில் பேசுறத அவமானமா நினைக்காதீங்க.. ப்ளீஸ் கெஞ்சி கேட்குறேன்.. செல்வராகவன் எமோஷனல் பதிவு..

படத்தினை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கடைசியாக ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் தற்போது மெய்யழகன் மீண்டும் கார்த்திக்கு ஒரு நிச்சய வெற்றியைக் கொடுக்கும். படம் முழுக்க தஞ்சாவூர் கிராமங்களைச் சுற்றி கதை நடப்பதாக உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் இடம்பெறுகிறது.

இப்படி டிரைலர் முழுக்க கார்த்திக்கே உரிய மேனரிஸம், ஆக்ஷன், யதார்த்த நடிப்பு மற்றும் சீனியர் நடிகர்கள் என அனைத்து அம்சமும் கலந்ததாக மெய்யழகன் உருவாகியிருக்கிறது. திரையில் மெய்யழகன் எப்படி ஜொலிக்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.