இந்த நிலையில், நெட்டிசன்கள் அனுஷ்காவின் ஊக்கமளிக்கும் செயலை ஒரு பக்கம் பாராட்டினாலும் இன்னொரு பக்கம் அவர் அணிந்த ஜீன்ஸ் மற்றும் ஷர்ட் குறித்த ஆராய்ச்சியையும் செய்துள்ளனர்.
நேற்றைய போட்டியின் போது அனுஷ்கா ஷர்மா தேர்ந்தெடுத்திருந்த ஆடையாக, ஆர்கானிக் காட்டன் சட்டை என்றும், அதேபோல் ரைன்ஸ்டோன்களால் அலங்கரிக்கப்பட்ட நீல நிறத்தை சேர்ந்த ஜீன்ஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சான்ட்ரோ என்ற பிரென்ச் பிராண்டை சேர்ந்த இந்த ஜீன்ஸ் மற்றும் ஷர்ட், இந்திய மதிப்பில் ரூ.25,700 ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒளிரும் முத்துக்கள் மற்றும் ஒளிக்கதிர்களை போன்ற அலங்காரத்துடன் அந்த ஜீன்ஸ், இரவு நேர கொண்டாட்டம் மனநிலைக்கு சிறப்பாக பொருந்தியது என்பதும், பேஷனை விரும்பும் பலருக்கு இது ஒரு வித்தியாசமான ஸ்டைலிஷ் தேர்வாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, அனுஷ்கா சர்மா பேஷனான உடைகளை அணிவதில் பிரபலமானவர். வழக்கமான ஆடைகளை அவர் அணிய மாட்டார் என்பதும், உயர்தர கேஷுவல் ஆடைகளையே தேர்ந்தெடுப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனுஷ்காவின் ஆடைகளும், அணிகலன்களும் எளிமையாக இருந்தாலும், அவை விலை உயர்ந்ததாகவும், ரிச்சாகவும் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, அவர் அணிந்திருந்த கிளாசிக் தங்கக் கடிகாரம், வளையல்கள் மற்றும் கண்ணைக்கவரும் காதணிகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
நேற்றைய போட்டியில் RCB வென்றதும், விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவை அழைத்துச் சென்று கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதும், பின்னர் விராட் கோலிக்கு அன்பு முத்தம் கொடுத்து தனது வாழ்த்துக்களை அனுஷ்கா ஷர்மா தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.