150 ரன்கள் மட்டுமே இலக்கு.. 3 தோல்விக்கு பின் ராஜஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா?

By Bala Siva

Published:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 56வது போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றதை அடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனால் கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்து

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் கொல்கத்தா எடுத்துள்ளது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணி இன்னும் சில நிமிடங்களில் 150 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கொல்கத்தா அணியின் வெங்கடேச ஐயர் மட்டுமே 57 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியின் சாஹல் 4 விக்கெட்டுகளையும் டிரெண்ட் போல் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

kkr vs rr1ராஜஸ்தான் அணி ஏற்கனவே வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வெல்லும் செல்லும் வாய்ப்பு பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொல்கத்தா அணியும் 10 புள்ளிகளில் இருப்பதால் அந்த அணி இன்றைய போட்டிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இ

இன்றைய போட்டியில் வெல்லும் அணி நான்காவது இடத்தை 12 புள்ளிகளுடன் பிடிக்கும் என்பதால் இந்த போட்டியை வெல்ல இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட ஐதராபாத் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டதை அடுத்து மீதம் உள்ள எட்டு அணிகளில் எந்த நான்கு அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் தற்போதைய நிலையின் படி சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது மீதமுள்ள ஆறு அணிகளில் எந்த இரண்டு அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதை இனிவரும் போட்டிகளின் முடிவுகள் தான் நிர்ணயம் செய்ய முடியும்.

மேலும் உங்களுக்காக...