150க்குள் சுருண்ட மும்பை.. சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

Published:

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் அபார பந்துவீச்சு காரணமாக மும்பை அணி 139 ரன்களுக்கு சுருண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரை மும்பை அணி தான் ஆதிக்கம் செய்து உள்ளது என்பதும் ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் மும்பை அணி தான் வென்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த ஆதிக்கத்தை இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திசை திருப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்த சிஎஸ்கே கேப்டன் தோனி எடுத்த முடிவு மிகச் சரியானது என்பது அபாரமான பந்துவீச்சில் இருந்து தெரியவந்தது.

csk pathiranaஇரண்டாவது ஓவரிலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் கிரீன் அவுட் ஆக அதன் பிறகு மூன்றாவது ஓவரில் இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா அவுட் ஆகினர். அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுக்கள் விழுந்தாலும் வதேரா மிகச் சிறப்பாக விளையாடிய 64 ரன்கள் எடுத்தார். இதையடுத்து மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து உள்ளது

இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, பதிரானா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் களையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...