புரட்டாசி மாதம் தான் நமக்கு நவராத்திரி வரும் என்று தெரியும். ஆனால் இப்போது ஆஷாட நவராத்திரியையும் நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் இது வாராஹி அம்மனுக்காகக் கொண்டாடி வருகிறோம்.
கிராமங்களில் சப்த கன்னியர்களான 7 வகையான தெய்வங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.இவர்களில் ஒருவர் தான் வாராஹி அம்மன். அன்னை ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக இருப்பவள். ஒவ்வொரு கிராமத்திலும் சப்த மாதர்களோடு வீற்றிருப்பாள். கிராமத்தில் வயல்வெளிக்குப் போகும்போதும் சரி.
அங்குள்ள மரத்தக்குக் கீழேயும் கூட வாராஹி அம்மனை வைத்திருப்பார்கள். அவள் விவசாயத்தைக் காக்கக்கூடிய தெய்வம். வாராஹிக்கு எவ்வளவோ சிறப்புகள் இருந்தாலும் அவற்றில் முதன்மையானது அவள் விவசாயத்தைக் காக்கக்கூடிய கடவுள்.
அதனால் தான் கலப்பையோடு காட்சி தருகிறாள். தங்களுயை விவசாயம் நல்லாருக்கணும். தங்களுடைய வாழ்வு நல்லாருக்கணும் என மக்கள் வழிபடக்கூடிய தெய்வம் தான் வாராஹி. அப்படி வழிபட்ட நாள் தான் இந்த ஆஷாட நவராத்திரி. இது ஆனி மாதத்தில் நாம் கொண்டாடுகிறோம்.
அடுத்தது ஆடி மாதம். ‘ஆடிப்பட்டம் தேடி விதை போடு’ என்று சொல்வார்கள். விவசாயத்தை நாம் துவங்குவதற்கு முன்பாக இந்த அம்பிகையின் அருளைப் பெற்று தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்தும் விடுபட அம்மனின் அருளைப் பரிபூரணமாகப் பெறவும் தான் இந்த ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 6.7.2024 (நாளை)அன்று காலை 7.50 மணி முதல் 8.30 மணி வரை ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு 10.07.2024 அன்று பஞ்சமி வருகிறது. அதன்பிறகு அம்பாளுக்கு சிறப்பான நாள் அஷ்டமி.
13.07.2024 அன்று மாலை 2.14 மணி முதல் மறுநாள் மாலை 4.02 வரை அஷ்டமி வருகிறது. இந்த நேரத்தில் அம்பாளை வழிபடலாம். 15.07.2024 அன்று மாலை 5.30 மணிக்கு மேல் தசமி வருகிறது. அன்றுடன் இந்த ஆஷாட நவராத்திரி நிறைவடைகிறது.
அகல்விளக்குல பஞ்சு திரி போட்டு நெய் தீபம் ஏற்றலாம். மாலையில் வழிபடுவது சிறப்பு. உருளை, மரவள்ளி, சர்க்கரை வள்ளி, நிலக்கடலை, கடலை மிட்டாய், மாதுளம்பழம் வைக்கலாம். வாழைப்பழம் நைவேத்தியமாக வைக்கலாம்.
சர்க்கரைப் பொங்கல், புளிசாதம், மிளகு வடை செய்து வைக்கலாம. மல்லி, கதம்பம் என ஏதாவது ஒரு மலரை வைத்து வழிபடலாம். நோய் நீங்க, வறுமை நீங்க, பகை நீங்கி நல்ல எதிர்காலத்தைத் தருவாள் இந்த வாராஹி.
தஞ்சை பெரிய கோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும்.
மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.