கூலி படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்.. அடுத்தடுத்த அப்பேட்களால் ரசிகர்கள் குஷி

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 171-வது படமாக உருவாக உள்ளது கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தினை இயக்குகிறார். லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் அடுத்த படமாக ரஜினியை இயக்கப் போகிறார் என்ற செய்தி வந்தவுடன் ரசிகர்கள் குஷியாகினர். ஜெயிலர் படத்தில் மிரட்டலான நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த சூப்பர் ஸ்டார் அடுத்ததாக ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார்.

இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சரத்குமார் நடிப்பில் வெளிவந்த படமான கூலி என்ற படத்தின் தலைப்பையே லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்திற்கும் சூட்டினார்.

மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பினைப் பெற்றது. படத்தில் ரஜினியுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு சத்யராஜ் மீண்டும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்திருக்கிறார்.

ஆட்டோ மொபைல் துறையின் அரசனாக விளங்குமா பஜாஜ் சிஎன்ஜி பைக்.. உலகமே எதிர்நோக்கும் சிஎன்ஜி பைக்கில் அப்படி என்ன இருக்கு?

தற்போது மேலும் ஒரு நடிகை கூலி படத்தில் இணைந்துள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் தான் அவர். தமிழில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் சிங்கம் 3. மேலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சலார். தற்போது கூலி படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜும் இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இனிமேல் என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தனர். இப்பாடல் பெரிதும் வரவேற்பினைப் பெற்ற நிலையில் தற்போது மீண்டும் தனது படத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

மேலும் கூலி படத்தின் ஷுட்டிங் இன்று முதல் (ஜுலை 5) தொடங்கும் என சன்பிக்சர்ஸ் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.