பெருமாள் தசாவதாரம் எடுத்தது நமக்கு தெரியும். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உண்டு. அவை
மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராமாவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ணர் அவதாரம், கல்கி அவதாரம்.
கிருஷ்ண அவதாரத்தை கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து குருசேஷ்த்ரயத்தத்திற்கு காரண தூதராய் அழித்தல் தொழிலைச் செய்ததாக பாகவதம் கூறுகிறது.
கிருஷ்ணர் தசாவதாரத்தில் 9வது அவதாரம். கம்சனை வதம் பண்ண எடுத்தார். வசுதேவர், தேவகி யின் மகனாக மதுராவில் பிறந்தார்.
தேவகியின் அண்ணன் தான் கம்சன். கம்சனுக்கு ஒரு அசரீரி வந்தது. தேவகியின் 8வது குழந்தையால் உனக்கு அழிவு வரும்னு அந்த அசரீரி சொன்னது. அதனால கம்சன் தேவகியோட எல்லா குழந்தைகளையும் கொன்னுக்கிட்டே இருந்தான்.
8வது குழந்தையை எப்படியாவது காப்பாத்தணும்னு சொல்லி வசுதேவரும், தேவகியும் இரவோடு இரவாக யமுனை ஆற்றின் அக்கரையில் விட்டார். கோகுலத்தில் விட்டார். நந்தகோபர் யசோதா தம்பதியரிடம் கொண்டு போய் விட்டார்கள்.
அப்புறம் கம்சன் கிருஷ்ணர் இந்த இடத்தில் தான் இருக்கான்னு கண்டுபிடிச்சி அவனை அழிக்கறதுக்கு பலமுறை முயற்சி பண்ணினான். ஒருமுறை பூதகியை அனுப்பினான். கடைசியாக கிருஷ்ணர் வந்து கம்சனை வதம் பண்ணிட்டாரு.
கோகுலாஷ்டமியான கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைகள் எல்லாம் இந்த சுலோகத்தை மனதில் நிறுத்தி சொல்லலாம்.
வசுதேவம் சுதம்தேவம் கம்ச சானூர மர்தனம்
தேவகீ பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
இந்த சுலோகத்தின் பொருள் என்னவென்றால், வசுதேவரின் மகன் கிருஷ்ணர் வந்து கம்சனை வதம் செய்ததால தேவகிக்கு ரொம்ப நிம்மதியா இருந்தது.
இந்த படைப்பு உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் ரட்சிப்பதற்காகப் படைக்கப்பட்டது.