உங்களுக்கும்… உங்கள் முன்னோருக்கும் நலன் கிடைக்க மறக்காமல் இன்று பரணி தீபம் ஏற்றுங்க…!

By Sankar Velu

Published:

கார்த்திகை மாதம் ஆரம்பித்த உடனே நமக்கு மகிழ்ச்சி பொங்கி விடும். நிறைய விளக்குகளை வீட்டு வாசல்களில் தினமும் ஏற்றி…ஏற்றி நம் மன இருளை அகற்றுவோம்.

திருக்கார்த்திகைக்கு முன் ஏற்றக்கூடிய தீபம் பரணி தீபம் . ஏற்றும் முறை மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

இன்று (5.12.2022) தான் பரணி தீபம் கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் விடியற்காலையில் பரணி தீபம் ஏற்றுவர். நாளை (6.12.2022) அதிகாலை 4 மணிக்கு ஏற்றுவர். வீடுகளில் அதற்கு முந்தைய நாள் மாலை அதாவது இன்று மாலை 6 மணிக்கு ஏற்ற வேண்டும்.

Yeman
Yeman

நம் முன்னோர்களின் நினைவாகவும், நமது வாழ்க்கையில் எமலோகத்தில் கஷ்டமின்றி துன்பமின்றி இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தீபம் ஏற்றுவர். தரும தேவனாக இருந்து நீதியை நிலைநாட்டக்கூடிய காலதேவனாக இருந்து செயல்படுபவர் தான் எமன்.

இவருக்காக நினைத்து வழிபட்டு அவரது கருணையை முன்னோருக்கும் நமக்கும் கிடைக்க ஏற்றும் தீபம் தான் பரணி தீபம். பஞ்சபூதங்களும் நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் 5 விளக்குகளை ஏற்றுவர்.

புறத்தில் நமக்கு எப்படி பஞ்சபூதங்கள் உறுதுணையாக இருந்து செயல்படுகிறதோ அதே போல அகத்திலும் நமக்கு உறுதுணை புரிய ஏற்றுவர். கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்றி பஞ்சபூதங்கள் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பரணி தீபத்தையும் ஏற்றுகிறோம்.

பஞ்சபூதங்கள் சரியாக இருக்க வேண்டும் என்றால் காற்றும் அதிகமாக அடிக்கக்கூடாது. மழையும் சரி…வெயிலும் சரி…பூமியும்… நிலநடுக்கம் வந்துவிடக்கூடாது. கடல் மட்டமம் உயர்ந்தும், சுனாமியும் என வந்துவிடக்கூடாது அல்லவா? அவை அனைத்தும் சரியாக செயல்பட்டால் தான் நாம் நலமாக வாழ முடியும். அதற்காகத் தான் இந்த பரணி தீபம்.

பஞ்சபூதங்களும் ஒழுங்காக வேலை செய்தால் தான் நாம் நலமாக வாழ முடியும். அதற்கு நாம் பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமானிடம் தான் முறையிட்டு வணங்க வேண்டும். திங்கள் கிழமை சோமவாரம்.

Parani deepam22

இன்று பிரதோஷமும் சேர்ந்து உள்ளது. அதனால் இத்தகைய சிறப்புக்குரிய நாளில் பரணி தீபத்தை ஏற்ற வேண்டும். 5 அகல்விளக்குகளை வட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். வாசலில் எப்போதும் 2 விளக்குகளை ஏற்றுங்கள்.

பரணி தீபத்திற்கு என்று தாம்பாலத்தில் கோலமிட்டு 5 விளக்குகளும் முகம் பார்க்கும் வகையில் ஒவ்வொரு விளக்குக்கும் பூ வைத்து இந்த தீபத்தை பூஜை அறையில் வைத்து ஏற்ற வேண்டும். இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுங்கள். 6 மணியில் இருந்து 6.30க்குள் ஏற்ற வேண்டும்.

இது தானாக அணைந்துவிட வேண்டும். சுவாமிக்கு 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு வைத்து நமக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் பாராயணத்தைப் படித்துக் கொண்டு மனமுருக உங்களது முன்னோர்கள் மேல் உலக நலனைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அந்த ஆத்மா செய்த பாவங்களை நீக்க வேண்டும். நமது காலத்திற்குப் பிறகு இருள் உலகத்தை அடையாமல் சிவபெருமானின் திருவடியை அடைய வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

முன்னோர்களுக்கும், நமக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்று நினைத்து ஏற்ற வேண்டிய உன்னதமான நாள் தான் இந்த நாள். அதனால் மறக்காமல் உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நலன் கிடைக்க இந்த பரணி தீபத்தை ஏற்றுங்கள்.