டபுள் எவிக்சன், ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பம்!

Published:

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐம்பத்தி ஆறு நாட்கள் முடிவடைந்து ஐம்பத்தி ஏழாவது நாள் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பை அதிகமாக்க பிக்பாஸ் குழுவினர் புதிய திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது.

தற்போது இருக்கும் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என்பதால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதால் அடுத்த வாரம் இரண்டு போட்டியாளர்களை எலிமினேஷன் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

biggboss quincyஅதுமட்டுமின்றி ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வைல்ட்கார்ட் போட்டியாளராக வரும் நபர் திரைப்படங்களில் நடித்தவர் என்றும் மக்கள் மத்தியில் பிரபலம் என்றும் கூறப்படுகிறது.

2 போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு ஒரு போட்டியாளரை மீண்டும் களம் இறக்குவதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் விறுவிறுப்பாகும் என்றும் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

bigg bossதற்போது சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி ராபர்ட் மற்றும் குயின்ஸி ஆகிய ஏழு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜிபி முத்துவை சேர்த்தால் எட்டு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

மொத்தம் உள்ள 21 போட்டியாளர்களில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அடுத்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி ஒரு போட்டியாளர் எண்ட்ரி கொடுத்தால் மொத்தம் 12 போட்டியாளர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேலாவது பிக்பாஸ் நிகழ்ச்சி முந்தைய சீசன்களில் போல் விறுவிறுப்பாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...